கார் துடைக்க பத்து ரூபாய் டிப்ஸ் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்!! தற்போது வாங்கிய முதல் கார்.!! உருக்கத்துடன் பதிவிட்ட வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் புகழ்.இவர் தற்பொழுது ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் புகழ், பாலா, சிவாங்கி, அஸ்வின் உள்ளிட்டோர் மிகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்கள். அந்த வகையில்  இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தான் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இதன் மூலம் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளது.  அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல ஷோக்களில் கலந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்து வருகிறது.

இவ்வாறு குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்த புகழ் தற்பொழுது சொந்தமாக  புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தற்ப்போது மாகாப்பா மற்றும் புகழ் இருவரும் காருடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதோடு வீடியோ ஒன்றில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது என் பரம்பரை இல்லையே இதுதான் நான் வாங்கிய முதல் கார் இதைப் பார்த்ததும் எங்கம்மா அழுதிட்டாங்க என்று கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த புகழின் ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை கூறி வருகிறார்கள். அந்தப்புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.  இதோ அந்த வீடியோ.