தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இதுவரைக்கும் ஆக்சன் படங்களாக கொடுத்து வந்த நடிகர் விஜய் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு செண்டிமெண்ட் திரைப்படத்தில் நடுத்திருப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை தங்களது குடும்பத்துடன் சென்று பார்த்து வருகிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் அமைந்துள்ள அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியான உடனே பல மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நிலையில் ரஞ்சிதமே பாடலுக்கு அழகாக ஒரு நடனத்தை ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரபலம் ஒருவர். இவருடைய இந்த நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. கடந்த மூன்று சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நான்காவது சீசன் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து இந்த சோவையை தாங்கக்கூடிய ஒருவர்தான் செஃப் தாமு.
இவர் தற்போது ஒரு அழகான நடனமாடிய அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வகையில் அந்த வீடியோவில் வாரிசு படத்தில் அமைந்துள்ள ரஞ்சிதமே பாடலுக்கு செம க்யூட்டாக நடனம் ஆகியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம டிரண்ட் ஆகிய வருகிறது.
இதோ அந்த வீடியோ..
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…