நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பலரும் உண்மை எது என தெரிந்து கொள்ளாமல் மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள். அதன் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் குக் வித் கோமாளி பிரபலத்தின் பெயரைச் சொல்லி ஒரு பெண்ணிடம் இரண்டு நபர்கள் மிரட்டி 2 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருக்கும் நிலையில் அந்தப் பெண்ணும் போலீசில் புகார் அளிக்க தற்பொழுது அந்த இரு நபர்கள் கையும் களவுமாக சிக்கி உள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இதன் மூலம் பிரபலமாகும் பலருக்கும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி வரும் நிலையில் அந்த நபர்களும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
அப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் தான் நடிகர் தர்ஷன். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமான நிலையில் பிறகு கனா படத்தில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு தற்போது சில திரைப்படங்களில் நடித்தவரும் தர்ஷனுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் தற்பொழுது இவருடைய ரசிகை ஒருவரை இரண்டு பேர் மிரட்டி இரண்டு லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர். அதாவது போலி ஐடி மூலம் அந்த பெண்ணிற்கு மெசேஜ் செய்து பேசிய நபர்கள் இதன் மூலம் வாட்ஸப் நம்பர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றுள்ளனர்.
அதன் பிறகு அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மார்ஃபிக் பண்ணி அதனை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி தஞ்சாவூர் சேர்ந்த பெண்ணிடம் இரண்டு லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். எனவே இது குறித்து போலீசாரிடம் அந்தப் பெண் புகார் அளிக்க அந்த நபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள்.