கமலின் “பத்தல பத்தல” பாடலுக்கு நடனமாடி அசத்திய குக் வித் கோமாளி பிரபலங்கள் – ரசிகர்களை கவர்ந்து இழுத்த விடியோ.!

kamal-
kamal-

விஜய் டிவியில் படும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி இந்த சேனலின் டி ஆர் பி க்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிடிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு டிரஸ் பஸர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் சீசன் சற்று வித்தியாசமாக சமையல் தெரிந்த கலைஞர்களுடன் சமையல் தெரியாத விஜய் டிவி காமெடியர்களை இறக்கி நடத்தப்பட்டது.  நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட் அடிக்க சீசன் சீசனாக நடந்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது

இதில் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகி தற்போது 6 போட்டியாளர்கள் சமையல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் கடந்த மூன்று சீசன்களிலும் ஜட்ஜாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் இருந்து வருகின்றனர்.

இவர்களும் கோமாளிகள் உடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி பார்க்கும் ரசிகர்களுக்கு என்டர்டெய்ன்மெண்ட் ஆக இருக்கும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு கண்டிப்பான ஜட்ஜாக இல்லாமல் போட்டியாளர்கள் மட்டும் கோமாளிகள் என அனைவரிடமும் சகஜமாக பேசி ஜாலியாக இருந்து வருவார்கள்.

மேலும் அவ்வப்போது சில ட்ரெண்டிங் பாடல்களுக்கு நடனமாடி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்கள். அந்த வகையில் தற்போது செஃப் வெங்கடேஷ் பட் கோமாளிகள் உடன் இணைந்து விக்ரம் படத்தில் இடம் பெற்றுள்ள கமலின் பத்தல பத்தல பாடலுக்கு நடனமாடியுள்ளார் இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் பலரும் ட்ரண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.