விஜய் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரபலமடைந்தவர் சிவாங்கி. இவர் பாடுவதையும் தாண்டி இவர் செய்யும் காமெடி ஒவ்வொன்றும் ரசிக்கும்படி இருந்ததால் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து காமெடியனாக பணியாற்றி வருகிறார்.
நாளுக்கு நாள் சின்னத்திரையில் இவருக்கான வரவேற்பு அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் நிச்சயம் ஒருநாள் வெள்ளித்திரையில் காண வாய்ப்பு கிடைக்கும் என எதிர்நோக்கி இருந்தார் அந்த வகையில் ஒரு வழியாக அந்த ஆசையும் நிறைவேறி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து அவர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் சொன்னது. டான் படப்பிடிப்பில் இருந்து ஒரு நாள் நாங்கள் விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றோம் அப்போது சிவகார்த்திகேயன் என்னை அழைத்துச் சென்றார் அப்போது நாங்கள் விஜய்யை பார்த்து சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம் மேலும் விஜய் என்னுடைய நிகழ்ச்சிகளை பார்ப்பார் எனவும் அவர் கூறினார்.
அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது அதன் பின் தான் படத்தில் தொடர்ந்து நடித்து வந்தேன் இந்த படத்தின் கதை என்னவென்று எனக்கு இயக்குனர் சொன்னதே கிடையாது இருப்பினும் நடித்தேன் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பது மட்டும் தான் எனக்கு தெரியும் மற்றவர்களுக்கு எல்லோருக்கும் கதையை சொன்னாலும் எனக்கு மட்டும் படத்தின் கதையை சொல்லாமலேயே படத்தில் நடிக்க வைத்து எடுத்து விட்டார் என கூறி புலம்பினார்.