விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவையும் தாண்டி பிரபலமாகி இருக்கும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முக்கிய பிரபலம் ஒருவர் புதிய கார் வாங்கி இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள் அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர் அப்படி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் முத்துக்குமார் ஸ்டண்ட் நடிகரான இவர் பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.
ஆனால் பெரிதாக அந்த படங்கள் இவருக்கு பிரபலத்தை தந்தது இல்லை ஆனால் இந்நிகழ்ச்சி பெரும் திருப்பமுனையாக அமைந்திருக்கிறது. இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தான் பலருக்கும் இவர் யார் என்பது தெரியவந்துள்ளது பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் இவர் குழந்தை மனம் கொண்டவர் என இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் தெரிந்து கொண்டார்கள்.
இந்நிலையில் முத்துக்குமார் சமீபத்தில் புதிய கார் வாங்கியிருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் கார் வாங்கிய க்யூட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் முத்துக்குமார் இனோவா கிரிஸ்டா என்ற காரை வாங்கி இருக்கும் நிலையில் இந்த காரின் விலை சுமார் ரூபாய் 30 லட்சம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு புதிய கார் வாங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள முத்துக்குமார் அதில்,
மாற்றமே வாழ்க்கை!
ஏமாற்றத்தை நோக்கிய என் இனிய திரைப்பட பயணத்தில்..
எமை வந்தடைந்த புதிய மகிழுந்து!
எமது குடும்பத்தின் கொண்டாட்டத்தையும் குதூகலத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் எனது பெற்றோருக்கும், என் இணையவருக்கும், என் குழந்தைக்கும் எமது உழைப்பு அர்ப்பணித்து மகிழ்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.