பெருசா படிக்கவில்லை என்றாலும் ஒரு கோடி ரூபாய்க்கு BMW கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.!

cookwithcomali1

பிரபல விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  இந்நிகழ்ச்சிக்கு என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இது சமையல் நிகழ்ச்சி என்றாலும் அனைவரும் விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் விஜய் டிவி டி ஆர் பி எல் முன்னணி வகிக்கிறது. பிக்பாஸ் நிகழ்சியை விடவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தான் அதிக ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் கோமாளிகள், குக்குகள் மற்றும் நடுவர்கள் என்று அனைவரும் மிகவும் காமெடியாக கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைவருமே ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்கள். அதோடு ஒரு சிலருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் கோமாளிகளாக இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் சிவாங்கி மற்றும் புகழ் தற்பொழுது வெள்ளித்திரையில் தங்களது கால் தடத்தை பதித்துள்ளார்கள்.

புகழ் தற்பொழுது விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்து வருகிறார் அதோடு சில படங்களும் கைவசம் வைத்துள்ளார். சிவாங்கியும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்காக ஒரு பாடல் பாடி உள்ளார்.

இவ்வாறு இவர்கள் எப்படி பிரபலமடைந்து உள்ளார்களோ அதே அளவிற்கு நடுவர்களாக பணிபுரிந்து வரும் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இவர்களும் கோமாளிகள் என்ன தான் இவர்களை கிண்டல் செய்தாலும் அதனை ஜாலியாக எடுத்துக் கொண்டு அவர்களுக்கு டப் கொடுத்து வருகிறார்கள்.

venkatesh-bhatt
venkatesh-bhatt

விஜய் டிவியில் எந்த சமையல் நிகழ்ச்சியை ஒளிப்பரபானாலும் இவர்கள் இருவரும் தான் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் வெங்கடேஷ் பட் சமீபத்தில் ஒரு கோடி மதிப்புள்ள BWW கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதோட முக்கியமான ஒன்றை எதுவென்றால் வெங்கடேஷ் பட் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

அந்த வகையில் படிப்பை விடவும்,  திறமை இருந்தால் எது வேணாலும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களில் இவரும் முக்கியமான ஒருவர்.

cookwithcomali-venkateshbhatt-bought-BMW-car-1