பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்.!

ashwin

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் விஜய் டிவியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித் திரையில் கலக்கி வருபவர்கள் பலர் உள்ளனர் அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் அஸ்வின்.

ஆண் ரசிகர்களை விட இவருக்கென தனி ஒரு பெண் ரசியை கூட்டம் இருந்து வரும் நிலையில் இவருடைய ஆணவப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு மன்னிப்பு கேட்டு அதனை திருத்திக் கொண்டார் இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தவரும் அஸ்வின் தற்பொழுது செம்பி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது மேலும் இவர் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அஸ்வின் நடிப்பில் கடந்த ஆண்டு என்ன சொல்லப் போகிறாய் திரைப்படம் வெளியான நிலையில் இந்தப் படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை ஆனால் செம்பி படத்தில் இதற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

aswin
aswin

இந்நிலையில் தற்பொழுது அஸ்வின் மேலும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்தினை அரவிந்த் சீனிவாசன் என்பவர் இயக்க இருக்கிறார் இந்த இயக்குனர் இதற்கு முன்பு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த தேஜாவு என்ற திரைப்படத்தினை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஜென்ட்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது மேலும் தற்பொழுது இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேடும் பணியில் பட குழுவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் அஸ்வினை சந்தித்த புகைப்படம் கசிந்துள்ளது.