குக் வித் கோமாளி 3 : டைட்டில் வின்னருக்கு கொடுக்கபட்ட பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா.?

cook-with-komali-
cook-with-komali-

விஜய் டிவியில் பல என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் சற்று வித்தியாசமாக சமையல் தெரிந்த பிரபலங்களுடன் சமையல் தெரியாத காமெடி பிரபலங்களை இறக்கி ஒரே கலாட்டா நிகழ்ச்சியாக ஆரம்பித்தனர்.

அந்த கான்செப்ட் ஒர்க் அவுட் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக நடத்தி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமோ அதுபோல இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அவர்களது கேரியரில் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது இதன் பைனல் எபிசோட் நாளை ஒளிபரப்பாக உள்ளது அதனால் வின்னர் யாராக இருப்பார் என ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். பைனல் எபிசோடில் ஸ்ருதிஹா, அம்மு அபிராமி, தர்ஷன், வித் யூ லேகா போன்ற சில பிரபலங்கள் இருக்கின்றனர்.

இதற்கு முன் நிறைவடைந்த இரண்டு சீசன்களிலும் வெற்றி பெறுபவருக்கு பரிசு தொகையாக பணம் வழங்குவார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின் செய்தார் அவரை தொடர்ந்து இரண்டாவது சீசனில் கனி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனின் பைனலில் ஸ்ருதிகா வெற்றி பெற்றுள்ளார் என தகவல் வெளி வந்துள்ளன. மேலும் அவருக்கு பரிசு தொகையாக 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இந்த செய்தி தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி பரவி வருகின்றன.