விஜய் டிவி குக் வித் கோமாளி சீசன் 2 முதல் போட்டியாளர் யார் தெரியுமா.? அதுவும் ஒட்டுமொத்த இளசுகளின் கனவு கன்னி.. இதோ விஜய் டிவி வெளியிட்ட புகைப்படம்

vijay-tv
vijay-tv

சமீபகாலமாக தொலைக் காட்சிகளுக்கு இடையே டிஆர்பி-யல் கடும் போட்டி நிலவி வருகிறது, அந்த வகையில் பல தொலைக்காட்சிகளில் புதுபுது நிகழ்ச்சி புதுப்புது சீரியல் என டி ஆர் பி யில் முதலிடம் பிடிக்க ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சி எப்படியாவது முதல் இடத்தை பிடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்,. அந்தவகையில் விஜய் தொலைக்காட்சி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தார்கள் இதன் முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது.

ஒளிபரப்பப்பட்ட முதல் சீசனில் பிக்பாஸ் வனிதா ,மோகன் வைத்தியா, நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள். இந்த முதல் சீசனில் வெற்றிபெற்றவர் வனிதா விஜயகுமார்.

இந்த நிலையில் இதன் இரண்டாவது சீசன் தொடங்க இருக்கிறது இந்த சீசனின் போட்டியாளராக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற பட்டியலை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதில் முதல் போட்டியாளராக இளசுகளின் கனவு கன்னி ஷகிலா கலந்துகொள்ள இருக்கிறார், இந்த சீசன் வருகின்ற சனி மற்றும் ஞாயிறு மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பப்படும்.