பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்கள்.. அப்பனா காமெடிக்கு பஞ்சமே இருக்காது..

bigg boss 7
bigg boss 7

Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வருடம் தோறும் புது புது போட்டியாளர்களுடன் அறிமுகமாகி வருகிறது. அப்படி நிகழ்ச்சிக்கு உலகளவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஏராளமான போட்டியாளர்கள் விரும்பி வந்தனர்.

அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி இருந்தாலும் இதன் மூலம் சர்ச்சையில் சிக்கி பல அவமானங்களை சந்தித்த பிரபலங்களும் இருக்கின்றனர். இதன் காரணமாக சமீப காலங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபலங்கள் தயக்கம் காண்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கும் நிலையில் 7வது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. 7வது சீசனையும் முந்தைய சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் தான் தற்பொழுதும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் பங்கு பெற இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் தான் கண்டிப்பாக காதல் கிசுகிசுப்பில் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது.

அப்படி குக் வித் கோமாளி பிரபலம் குரேஷி கலந்துக் கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மேலும் தற்பொழுது ரவீனா தஹா கலந்து கொள்ள இருக்கிறாராம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடைய மொக்கை ஜோக்குகள் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. எனவே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இவரைத் தொடர்ந்து மேலும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் விஜய் டிவி ஜாகுலின், இரவு நிழல் நடிகை ரேகா நாயர், பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகர் பிருத்திவிராஜ், கோவை டிரைவர் ஷர்மிளா,. செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், குரேஷி ஆகியோர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.