தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவரது நடிப்பு திறமைக்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம் அந்தளவு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். மேலும் நயன்தாரா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் நயன்தாரா சோலோவாக பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார் அந்த வகையில் கோலமாவு கோகிலா, அறம் ஆகிய திரைப்படங்களை கூறலாம். இந்த நிலையில் நயன்தாரா எந்த உடை அணிந்தாலும் அது ரசிகர்களின் பேவரைட் உடையாக மாறிக்கொண்டு வருகிறது.
அவ்வகையில் நயன்தாரா உடுத்தும் அதே உடையை ரசிகர்கள் அணிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அவர்களில் ஒருவர்தான் சுனிதா.
சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இதற்கு முன்பு சுனிதா பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் சுனிதா நயன்தாரா போல் உடையணிந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.