Cook with comali: கார் வாங்கிய ஆறு மாதத்தில் குக் வித் கோமாளி பிரபலம் விபத்தில் சிக்கியிருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கும் சீரியல் தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதற்கு முக்கிய காரணமாக கோமாளிகள் இருந்து வருகின்றனர். தொடர்ந்து இவர்களுடைய காமெடி ரசிகர்களை கவர்கிறது எனவே இதன் மூலம் பலரும் மன உளைச்சலில் இருந்து வெளிவந்து மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி வருகின்றனர். சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் காமெடி ஷோவாக அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது.
அப்படி குக் வித் கோமாளி 4வது சீசனில் ஆண்ட்ரியன் வெற்றி பெற்று இருக்கிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சக்திதான் விபத்தில் சிக்கி இருக்கிறார். இவர் டிக் டாக் மூலம் பிரபலமான நிலையில் இதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். அப்படி இரண்டு சீசன்களில் கலந்து கொண்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார்.
அப்பொழுது புகழுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஓம் நமச்சிவாய, என்னுடைய புதிய மயிலு.. உங்கள் அனைவரின் அன்புடனும் ஆதரவுடனும் எனது முதல் காரை வாங்கினேன் மக்களே என கூறியிருந்தார். இளம் வயதில் சக்தி கார் வாங்கி இருப்பதை பலரும் பாராட்டி இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அவர் வெளியிட்டிற்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சக்தி கையில் அடிபட்டு கட்டுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் அதில் அவர் ஹாய் நான் ஒரு சின்ன பிரேக் எடுத்து கொள்ள போறேன் என கூறினார். மேலும் நான் பழைய சக்தியாக இல்லாத மாதிரியான ஒரு பீல் இருக்கு மீடியாவில் நிறைய விஷயத்தை நான் புரிந்துக் கொண்டேன் ஆனால் எல்லாத்தையும் நான் இப்பொழுது சொல்ல முடியாது கொஞ்ச நாளைக்கு கண் காணாத இடத்திற்கு போயிட்டு வரேன் என்று எமோஷனலாக பதிவிட்டிருந்தார். அவர் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.