திருமண நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த புகழ்.. வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்

pukazh
pukazh

Cook with Comali Pugazh: குக் வித் கோமாளி புகழ் தனது திருமண நாள் அன்று குட் நியூஸ் சொன்ன தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தொடர்ந்து தனது காமெடியினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் புகழ். மேலும் இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் இவருடைய ஒவ்வொரு காமெடியும் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றது. எனவே இவருக்காக ஏராளமான ரசிகர்கள் உருவாக பிறகு பட வாய்ப்புகளையும் பெற்றார். அப்படி சமீப காலங்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அஜித் நடிப்பில் வெளியான வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவருடைய கேரக்டர் பாராட்டப்பட்டது. இப்படிப்பட்ட சூழ் நிலையில் பென்சி என்ற பெண்ணை ஐந்து வருடங்களாக காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த முறைப்படியும் பிறகு பென்சி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இஸ்லாம் முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இவ்வாறு திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தான் தந்தையாகி இருக்கும் மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘என்னுடைய வளர்ச்சியில் வழி துணையாய் வந்தவள் இப்போது என்னை தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கிறாள் இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசுக்கு ஈடு இணையே இல்லை என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப் போகிறது என்று நினைக்கும் போது இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்னை தகப்பனாகிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.