ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி யில் முதல் இடம் பிடிப்பதற்காக புது புது நிகழ்ச்சிகள் மற்றும் புதிய சீரியல்கள் என அனைத்தையும் ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற நிகழ்ச்சியாக குக் வித் கோமாலி நிகழ்ச்சி இருந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இதன் முதல் இரண்டு பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாவது பாகம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக இருப்பவர்களில் ஒருவர் ஸ்ருதிகா.
இவர் வேறு யாரும் கிடையாது பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தி தான் இந்த நிலையில் இன்று அன்னையர் தினம் என்பதால் பல நடிகர் மற்றும் நடிகைகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடு வாழ்த்து கூறுகிறார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ருதிகா தனக்கு வளைகாப்பு நடந்த தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது கணவர் அம்மா மற்றும் மாமியார் பாட்டி ஆகியோருடன் வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது என்றும் இந்த அன்னையர் தினத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் எனவும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு மற்றும் தியாகங்களுக்கு சொந்தக்காரரான அம்மா இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இவரின் வளைகாப்பு புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.