விஜய் டிவியில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி மக்கள் பலரின் கவனத்தை திசை திருப்பிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் பிரபலமடைந்து பாடல்களை பாடி அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் இவர் பாதியில் வெளியேறினார் பின்பு அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மக்களை என்டர்டெய்மெண்ட் செய்து வந்தார்.
மேலும் சிவாங்கி சினிமாவிலும் பாடகராகவும் நடிகையாகவும் தன்னை அறிமுகப்படுத்தி சிறப்பித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான் திரைப்படத்திலும் சிவாங்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
இந்த படத்தில் இவரது நடிப்பு பலரும் பாராட்டும் படி அமைந்துள்ளது. சோசியல் மீடியாவிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கும் சிவாங்கி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார் .
இந்த நிலையில் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் பங்கு பெற்றுள்ள மணிமேகலை மற்றும் சுருதிகா போன்றவர்களுடன் சமீபத்தில் சிவாங்கி சுற்றுலா சென்றுள்ளார் அப்போது சிவாங்கி மணிமேகலை மற்றும் ஸ்ருதிகாவிடம் கப்பலில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.