குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவது யார் தெரியுமா.? யாரும் எதிர்பார்க்காத தகவல்…

cook with comali 4
cook with comali 4

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் குக் வித் கோமாளி நான்காவது நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில்  கொஞ்சம் சமையல் கொஞ்சம் கலாட்டா என மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் புத்தம் புது கோமாளிகள் போட்டியாளர்கள் அதே நடுவர்கள் தொகுப்பாளர்கள் என அனைவரையும் வைத்து இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வார வாரம் ஒரு எலிமினேஷன் நடைபெறும் இதிலிருந்து ஒரு போட்டியாளர் வெளியேறுவார்கள் இதுதான் ரசிகர்களை கொஞ்சம் சோகத்தில் ஆழ்த்தும்.

ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது கடந்த மூன்று சீசனங்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடும் முயற்சி செய்து ஒவ்வொரு டிசையும் மிகவும் சிறப்பாக செய்து பாராட்டை பெற்று வருகிறார்.

அது மட்டுமில்லாமல் சிவாங்கிக்கு விஜய் டிவி சொம்பு தூக்குவதாக கூட பேச்சுகள் வெளியாக்கின இந்த சீசனில் முதல் ஆளாக வெளியேறிய கிஷோர் ராஜ்குமார் சிவாங்கியை வெளியே அனுப்பாமல் தன்னை வெளியே அனுப்பி விட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால் அது உண்மை இல்லை என கிஷோர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

கடந்த வார எபிசோடில் ஒருவர் தேர்ந்தெடுத்த பொருட்கள் சீட்டு குழுக்கள் மூலம் மற்ற போட்டியாளர்களுக்கு சென்றது அப்பொழுது சிவாங்கிக்கு பாகற்காய் வந்தது பாகற்காய் சமைத்தால் நான் தோற்று விடுவேன் இதனால் நான் சமைக்க மாட்டேன் நேரடியாக எலிமினேஷனுக்கு போய்விடுகிறேன் என கூறினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 ல் இருந்து இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்ற விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது கடந்த வாரம் விஷால் எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஷெரின் எலிமினேட் ஆவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் வெளியே செல்வது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். இந்த வாரம் ஷெரின் வெளியேறி விட்டால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்தது போல் காணப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.