விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் குக் வித் கோமாளி சீசன் 4 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, இதற்கு முன்பு மூன்று சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோ ஆக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் விசித்திர, மையம் கோபி, ஷெரின் சிருஷ்டி , விஜே விஷால், ஆண்ட்ரியன், காளையன் கிஷோர் ஆகியவர்கள் கடந்த மூன்று சீசங்கள் கோமாளியாக கலக்கிய சிவாங்கியும் இந்த சீசனில் குக்காக மாறி உள்ளார். அதனால் ரசிகர் மத்தியில் இன்னும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அப்படி இருக்கும் வகையில் இதுவரை ஐந்து போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது சிவாங்கி, ஆண்ட்ரியன் சிருஷ்டி, மைம் கோபி, விசித்திரா ஆகியோர்கள் குக் வித் கோமாளி நான்கு நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் தற்பொழுது தெரியவந்துள்ளது அதனைப் பற்றி இங்கே காணலாம். இந்த நிலையில் கோமாளியாக இருந்த சிவாங்கி தற்பொழுது முழு குக்காக மாறி உள்ளதால் அவருக்கு ஒரு எபிசோடுக்கு இருபதாயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்து பிரபலமான பிஜே விஷால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடுக்கு 25 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற ராஜ் ஐயப்பா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டு 26,000 சம்பளமாக வாங்கி வருகிறார். நடிகை விசித்ரா ஒரு எபிசோடுக்கு 30,000 சம்பளம் வாங்குகிறார். நடிகை ஷெரினுக்கு ஒரு எபிசோடுக்கு 35 ஆயிரம் சம்பளம். அதேபோல் சிருஷ்டி மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோருக்கு ஒரு எபிசோடுக்கு தல முப்பதாயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.
அதேபோல் இந்த சீசனில் அதிகமாக சம்பளம் வாங்கும் பிரபலம் என்றால் அது மையம் கோபி தான் இவர்தான் ஒரு எபிசோடுக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறாராம். இந்த தகவல் எந்த அளவு உறுதியான தகவல் என்று தெரியவில்லை ஆனால் இந்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.