cook with comali 4 : ஒரு வழியாக முடிவுக்கு வர இருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த சீசனில் ஐந்து போட்டியாளர்கள் இறுதிக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் யார் யார் என்பதை இங்கே காணலாம்.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ரியலிட்டி ஷோக்கலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் மக்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. கடந்த மூன்று சீசன்ங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் அமோக வாய்ப்புகள் கிடைப்பதால் கலந்து கொள்கிறார்கள் போட்டியாளர்கள். இந்த நிகழ்ச்சியில் விசித்ரா, மையம் கோபி, சிவாங்கி, சிருஷ்டி டாங்கே, ஆண்ட்ரியண்ணா, கஜேஷ், ஷெரின், கிரண், விஜே விஷால், ராஜ் ஐயப்பா காளையன், கிஷோர் ராஜ்குமார் ஆகியவர்கள் கூக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
அதேபோல் கோமாளியாக புகழ், சுனிதா, ஜி பி முத்து, குரேஷி ,மோனிஷா, தங்கதுரை, தீபன், சிபா, ஓட்டேரி சிவா, மணிமேகலை ,பரத், சரத், சக்தி வினோத் என பலரும் கலந்து கொண்டார்கள். இதற்கு முன்பு நடைபெற்ற டிக்கெட் டு பினாலே என்ற சுற்றில் வெற்றி பெற்ற விசித்ரா நேரடியாக பைனலுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இந்த வாரம் அரை இறுதி போட்டி நடைபெற்றது இதில் மையம் கோபி, சிவாங்கி, கிரண், சிருஷ்டி டாங்கே ஆகியவர்கள் வெற்றி பெற்றார்கள்.
இதில் பங்குபெறும் மூன்று பேர் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதனை தாமு, வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் அறிவித்தார்கள். இந்த நிலையில் இரண்டாவது இடத்தில் மையம் கோபி, மூன்றாவது இடத்தில் சிவாங்கி, நான்காவது இடத்தில் சிருஷ்டி டாங்கே என அறிவித்தார்கள் அதனால் கிரன் வெளியே செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐந்தாவது இடத்தில் கிரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த முறை ஐந்து பேரும் பைனலுக்கு செல்வதால் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
முதன்முறையாக சிவாங்கி பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவாங்கிக்காக தான் விஷாலை எலிமினேட் செய்தார்கள் என பெரும் குற்றச்சாட்டு இருந்தது அது மட்டும் இல்லாமல் சிருஷ்டி டாங்கேவை கார்னர் செய்தார்கள் அதற்கு சிவாங்கி நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் உங்களை மகிழ்விக்க பல தியாகங்களை செய்கிறோம் என கூறி வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.