தொலைக்காட்சியைப் பொருத்தவரை ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் பலத்த போட்டி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் எப்படியாவது டிஆர்பி யில் நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதுப்புது நிகழ்ச்சி மற்றும் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி தங்களுடைய டிஆர்பியை ஏற்றிக் கொள்ள நினைக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி புதுப்புது ரியாலிட்டி ஷோக்கல் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை மிகவும் பிசியாக வைத்து வருகிறார்கள் அப்படிதான் விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்றாவது சீசன் முடிவுக்கு வந்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது மேலும் இந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்த்து வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட மூன்று சீசன்ங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது நான்காவது சீசனை விஜய் தொலைக்காட்சி தொடங்கியுள்ளது.
இதன் அதிகார பூர்வ புரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதில் கோமாளி பற்றிய விவரம் தற்பொழுது தெரிய வந்துள்ளது சிலர் நாம் ஏற்கனவே பார்த்தவர்கள் தான் புதிய கோமாளிகளும் இந்த நிகழ்ச்சியில் தற்போது இணைந்துள்ளார்கள். அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற விவரம் தற்பொழுது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால், பிக் பாஸ் புகழ் ஷெரின், கோமாளியாக இத்தனை நாட்கள் நிகழ்ச்சியில் பயணித்த சிவாங்கி ஆகியோர்கள் போட்டியாளர்களாக வருகிறார்கள்.
புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்