விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக சீசன் சீசனாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இவை எட்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில் கூடிய விரைவில் ஒன்பதாவது சீசனும் தொடங்க உள்ளது. அதில் சூப்பர் சிங்கர் 7 யில் போட்டியாளராக அறிமுகமானவர் சிவாங்கி.
தனது குரல் வளத்தினால் ரசிகர்களை கவர்ந்து ஈர்த்தவர். பின்பு மாபெரும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்பற்றத் தொடங்கினர். சிவங்கி அப்பப்போ விதவிதமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிடுவார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார்கள் தற்போது பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று உள்ளதால் அடுத்து வரவிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா உடன் இணைந்து சிவாங்கி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சின்னத்திரையில் இவர் பாடல்கள் பாட ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையிலு ம் இவரது பாடல்கள் கொடி கட்டி பறக்கின்றனர்.
சமீபத்தில் கூட கவின் தேஜூ அஸ்வினி சேர்ந்து நடனமாடிய அஸ்கு மாரோ பாடலை சிவாங்கி தான் பாடியுள்ளார். இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படம் திரையரங்கில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது அவரது நடிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படத்தில் சிவாங்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து டூயட் பாடல் ஒன்று பாடியுள்ளார்.
இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “மாயன்” இந்த படத்தில் நடிகர் வினோத் மோகனுடன் ஜோடியாக பிந்து மாதவி நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மச்சி என்ற பாடலைத்தான் சிலம்பரசனுடன் சேர்ந்து சிவாங்கி பாடியுள்ளார். இந்த பாடலின் பிரமோ வெளியாகி ரசிகர்களை அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது.