விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பலரும் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து காணப்படுகின்றனர் அதனாலேயே தொலைக்காட்சியில் நடிக்க ஆசைப்படும் பலரும் விஜய் டிவியில் ஒரு அங்கமாக பயணிக்க வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். ஏனென்றால் இந்த தொலைக்காட்சியில் நடித்து வந்த பலரும் தற்போது பெரிய உச்சத்தில் காணப்படுகின்றன அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சிவாங்கி.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த சிவாங்கி பின்பு குக் வித் கோமாளி என்ற சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிவாங்கிக்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கினார் . அந்த அளவுக்கு இவரது பேச்சு மற்றும் செய்கை மக்கள் பலருக்கும் என்டர்டைன்மென்ட் ஆக அமைகின்றது.
குக் வித் கோமாளி முதல் சீசன் தொடங்கி தற்போது வரை மூன்றாவது சீசனிலும் சிவாங்கி கோமாளியாக பயணித்து வருகிறார். மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்ற டான் திரைப்படத்திலும் சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சினிமாவில் நடிப்பை தவிர ஒரு சில திரைப்படங்களிலும் பாடல்களையும் பாடி அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் சிவாங்கி ஒரு விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டாப் ஹீரோயின்கள் போல இவரும் நீளமான ஆடை அணிந்து வந்துள்ளார். ஆனால் அந்த டிரஸை போட்டுக் கொண்டு அவரால் படிக்கட்டில் ஏற முடியவில்லை அதனால் தத்தளித்துக் கொண்டிருந்த சிவாங்கிக்கு மூன்று நபர்கள் தூக்கிவிட்டு ஏறும் படியான காட்சிகள் படமாக்கப்பட்டு அந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் செம்மையாக சிரித்து வருகின்றனர் அந்த அளவிற்கு சிவாங்கி செய்வது க்யூட்டாக இருக்கிறது எனவும் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.