குக் வித் கோமாளி சீசன் – 3 ஆரம்பிச்சசு வெளியே கசிந்த புகைப்படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்.

cook with komali

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் சீசனாக விஜய் தொலைக்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி ஒரு காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி ஆகும். மேலும் இதில் பல வித்தியாச வித்தியாசமான டாஸ்குகளை வைத்து போட்டியாளர்கள் மற்றும் மக்கள் என பலரையும் குதுகலபடுத்தி வருகின்றன.

இந்த நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பலரும் ரசித்து பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகின்றன. அதில் குக்  வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா போன்ற பல பிரபலங்களும் தற்போது வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றன. மேலும் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக  காமெடி செய்து வந்த புகழ், பாலா, சிவாங்கி போன்ற பிரபலங்களும் தற்போது வெள்ளித்திரையில் டாப் நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும்  குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி  எப்போது தொடங்கப்படும் என பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் கூட கூடிய விரைவில் சீசன் 3 தொடங்க உள்ளதாக  அறிவிப்பு வெளிவந்தது. இருந்தும் எந்த புகைப்படமும் இதுவரை வெளிவராமல் இருந்து வந்தன.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி  செட்டில் சுனிதா மற்றும் தங்கதுரை இருவரும் கோமாளி வேடத்தில்  இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் பலரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது என சந்தோஷத்தில் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

cook with komali
cook with komali