சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் விஜே மணிமேகலை. பின்பு மணிமேகலை உசைன் என்னும் நடனக் கலைஞரை காதலித்து வந்தார் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் மணிமேகலையின் பெற்றோர்கள் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்கு திருமணமான அந்த நேரத்தில் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சி ஒளிபரப்பானது அதில் இருவரும் ஜோடிகளாக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் அதிக அளவு இருவரும் பிரபலம் அடைந்தனர். மேலும் மணிமேகலையின் டைமிங் காமெடி ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்தது.
அப்படி அதற்கு அடுத்து விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டு சிறப்பாக காமெடி செய்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்தார். மேலும் கொரோனா காலகட்டத்தில் பலரும் வேலை இல்லாமல் இருந்த நேரம் நேரத்தில் உசைன் மற்றும் மணிமேகலை இருவரும் இணைந்து யூடியூப் சேனலை ஆரம்பித்து.
அதில் தனது பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு எண்ணற்ற ஃபாலவேர்ஸ்களை தக்க வைத்துக்கொண்டு இதன்மூலம் பல லட்சம் ரூபாய்களை சம்பாதித்து வந்தனர். இதன் மூலம் மணிமேகலை சில விலை உயர்ந்த கார்களையும் வாங்கி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் மணிமேகலை இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள எங்களது சொந்த பைக்கை காணும் எனவும் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.
அதனை எடுத்து போலீசிலும் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் குக் வித் கோமாளி எபிசோடில் மணிமேகலையிடம் பாலா 2 லட்சம் ரூபாய் பைக்கை காணும் என்ற வீடியோவை யூடியூபில் போட்டு அதன் மூலம் 5 லட்சம் சம்பாதித்து உள்ளார் என கூறி உள்ளார்.