அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு உலக அளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வலிமை படம் தமிழையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
இதனால் முதல் நாள் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்த இருக்கிறது படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடங்கி அண்மையில் வெளிவந்த ட்ரைலர் வரை மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
வலிமை படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை இதுவரை சொல்லாமல் இருந்து வந்த நிலையில் வலிமை படத்தின் டிரைலர் வெளியானது ஒரு சில பிரபலங்களை காணமுடிந்தது அதை வைத்து வலிமை படத்தில் நடிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. அந்த வகையில் அஜீத்துடன் வலிமை படத்தில் கைகோர்த்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, விஜய் டிவி புகழ் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.
இந்த நிலையில் விஜய் டிவி புகழ், அஜித்துடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சில பதிவுகளை போட்டுள்ளார் அவர் கூறியது அஜித் சார் இந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல உங்க கூட பணியாற்ற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள் எனக் கூறி.
விஜய் டிவி புகழ் நடிகர் அஜித் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷப்பட்டு உள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் தற்போது நல்ல விதமான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.