சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உலகமெங்கும் பிரபலமடைந்த நிகழ்ச்சியாகும். மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தனது கவலை மறந்து விரும்பி பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி. முதல் மற்றும் இரண்டாவது சீசன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று நிறைவடைந்ததை அடுத்து தற்போது குக் வித் கோமாளி 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு ஃபேமசோ அதுபோல இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் மக்களிடையே பரிச்சயமானவர்கள் அப்படி இந்த நிகழ்ச்சியில் குக்காகவும் கோமாளியாகவும் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் தற்போது மக்கள் மற்றும் பிரபலங்கள் இடையே ரீச் அடைந்து வெள்ளித்திரையிலும் பயணித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பயணித்து வரும் புகழ் அவரது காமெடி மற்றும் ரியாக்சன் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து திரைப்படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார் அப்படி முதலில் சில படங்களில் சின்ன சின்ன ரோலில் காமெடியனாக நடித்த அறிமுகமாகிய புகழ்.
தற்போது டாப் நடிகர்களான அஜித்தின் வலிமை திரைப்படம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய காமெடியனாக நடித்துள்ளார். இந்தநிலையில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் புகழ். “Mr zoo keeper” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் இன்று மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து ஊட்டியில் தொடங்க உள்ளதாக புகழ் கலந்து கொண்டுள்ள குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தில் நிஜ புலியுடன் சூட்டிங் நடத்தப்படுவதால் அதற்கு இந்தியாவில் அனுமதி இல்லை என்பதால் பிலிப்பைன்ஸிஸ் என்ற நாட்டிலும் சூட்டிங் நடைபெறுமாம். இப்படி இந்த படம் குறித்து பேசிய புகழ் என்னை மக்கள் அதிகம் ஏற்றுக் கொண்டது இந்தக் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான் எனவும் கூறியுள்ளார்.