சின்னத்திரையில் பல டிவி சேனல்கள் இருந்தாலும் காமெடிக்கு என்று தனி பெயர்போன தொலைக்காட்சி விஜய் டிவிதான். ஆம் மற்ற சேனல்களை விட விஜய் டிவியில் காமெடிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த பல பிரபலங்கள் தற்போது முன்னணி ஹீரோக்களின் திரைப்படத்திலும் நடித்து வருகின்றனர்.
அந்தவகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓரளவுக்கு பிரபலமடைந்த புகழ் அடுத்ததாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது நிகழ்ச்சியில் புகழின் காமெடி, ரொமான்ஸ், நகைச்சுவைப் பேச்சு மக்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்த புகழுக்கு தற்போது சினிமாவிலும் காமெடியனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் டாப் ஹீரோக்கள் ஆன அஜித்தின் வலிமை திரைப்படம் மற்றும் அருண் விஜய்யின் யானை திரைப்படம் போன்றவற்றில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசன்களிலும் கலந்து கொண்டு பிரபலம்.
அடைந்த புகழ் அண்மையில் தொடங்கப்பட்ட மூன்றாவது சீசனில் கலந்து கொள்வாரா மாட்டாரா என பலரின் கேள்வியாக இருந்தது. அதனை எடுத்து முதல் எபிசோடில் புகழ் வராதது பலருக்கும் வருத்தத்தை அளித்தது. ஆனால் அடுத்த அடுத்த எபிசோடில் புகழ் கலந்து கொண்டுள்ளது. அதனால் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில் புகழ் அவரது காதலி குறித்து பேசியுள்ளார்.
ஜட்ஜாக இருக்கும் வெங்கடேஷ் பட் புகழிடம் கேட்டதற்கு புகழ் நான் பென்சி என்ற பெண்ணை ஐந்து வருடங்களாக காதலிக்கிறேன் நான் கலக்கப்போவது யாரு ஆடிஷனுக்கு சென்றபோது கோயம்புத்தூரில் முதன் முதலில் அவரை பார்த்தேன் எனவும் கூறினார். மேலும் எனக்கு அவர் ரொம்ப சப்போர்ட்டாக இருக்கின்றார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்களுடன் ஜாலியாக பேசுவது பார்க்க நன்றாக இருக்கிறது நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என எங்கிரேஜ் செய்கின்றனர் எனவும் அவரது காதலி குறித்து மிகப் பெருமையாக கூறியுள்ளார். திருமணம் எப்போது என்று கேட்டதற்கும் இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் எனக் புகழ் கூறியுள்ளார்.