குக் வித் கோமாளி புகழ் மற்றும் அம்மு அபிராமி நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா.!

kuk with comali 4
kuk with comali 4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி கலந்துகொண்ட புகழ் மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்று வரும் அபிராமி இருவரும் இணைந்து தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என விரும்புவோருக்கு அந்த நிகழ்ச்சிகள் துணையாக இருக்கின்றது. அந்த வகையில் குக் வித் கோமாளி  இந்நிகழ்ச்சியின் மூலம் பங்குபெற்ற ஏராளமானோருக்கு தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது காமெடி திறமையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர்தான் புகழ் தற்பொழுது இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து அதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.

இவ்வாறு போய்க் கொண்டிருந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்ற அந்த புகழும் மூன்றாவது இதன் மூலம் போட்டியாளராக கலந்து கொண்ட அம்மு அபிராமி இருவரும் இணைந்து திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இவ்வாறு இவர்கள் நடிக்கவுள்ளது திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் ஒளிபரப்புதுறை அமைச்சர் சுவாமிநாதன் பங்கு பெற்று இருந்தார். இந்த விழா திருப்பூரில் நடைபெற்றது,இந்த திரைப்படத்திற்கு “பாலமுருகனின் குதுகலம்”என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தின் ஹீரோவாக பாலமுருகன் என்பவரும்  ஹீரோயினாக அம்மு அபிராமியும்  நடிக்க உள்ளார்கள்.  மேலும் புகழ் இத்திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடிக்கவுள்ளார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் விரைவில் நடக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.