பிரபல விஜய் டிவியில் சீசன் சீசன் ஆக மக்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களது குரல் வளத்தினால் பிரபலம் அடைந்து தற்போது சினிமாவிலும் பாடல்களை பாடி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே அறிமுகமானவர் சிவாங்கி.
இவர் இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பாடல்களை சிறப்பாக பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எலிமினேஷனிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்பு இவர் பிரபல காமெடி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கோமாளியாக கலந்து கொண்டார்.
இந்த முதல் சீசன் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்களிடையே பெரிதும் ரீச் ஆனதை அடுத்து தற்போது சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் மக்களிடையே பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.
அந்த வகையில் குக் வித் கோமாளி 3 சீசன்களிலும் தொடர்ந்து கலந்துகொண்ட சிவாங்கி தற்போது சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சினிமாவில் சில பாடல்களையும் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சோஷியல் மீடியாவில் எண்ணற்ற ரசிகர்களை குவித்து வைத்திருக்கும் சிவாங்கி தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் 2015 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் மற்றும் தற்போது உள்ள புகைப்படம் இரண்டையும் இணைத்து நான் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.