தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், VVD கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலரும் இணைந்து உள்ளனர்.
இந்த படம் வெளிவருவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் படம் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பீஸ்ட் படத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் இருப்பது போன்ற தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பீஸ்ட் படம் வெளிவந்த அதே நேரத்தில் கேஜிஎப் 2 படமும் வெளிவந்ததால் அந்த படத்தை காணவே மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பீஸ்ட் படத்தின் வசூலும் குறைந்து வருகிறது. பீஸ்ட் படத்தின் கதை இப்படி இருக்க படம் வெளிவருவதற்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து, ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் ஆகியது.
அதிலும் குறிப்பாக விஜய் குரலில் வெளிவந்த ஜாலியோ ஜிம்கானா பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஜாலியோ ஜிம்கானா பாடலின் சூட்டிங் நடைபெறும்போது விஜயுடன் சிவகார்த்திகேயனின் டான் படக்குழுவினர் சந்தித்துள்ளனர். அப்போது டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் குக் வித் கோமாளி சிவாங்கி விஜயுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.
அந்த போட்டோவை தற்போது இணைய தளத்தில் சிவாங்கி பதிவிட்டு ஜாலியோ ஜிம்கானா செட்டில் நீங்கள் பேசிய அன்பான வார்த்தைக்கு நன்றி தளபதி என்றும் மேலும் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது எனவும் சிவாங்கி பதிவிட்டுள்ளார்.