திறமை உள்ளவர்கள் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் அவர்களை உடனடியாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிடும் சினிமாஅதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த சன்னி லியோனை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அவருக்கு நல்லபடியான பட வாய்ப்புகளைக் கொடுத்து தன் வசப்படுத்தியுள்ளது.
இந்திய சினிமா இந்தியின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின் தெலுங்கு சினிமா இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுத்து அவரை சந்தோஷப்படுத்த வருகிறது. இந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சன்னி லியோன் சிறப்பாக பயணிக்கிறார்.
குறிப்பாக தமிழில் இவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது தமிழில் ஏற்கனவே வடகறி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள சன்னி லியோன் தற்போது ஷீரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அதைத்தொடர்ந்து அவர் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார்.
இருப்பினும் சில காரணங்களால் அந்தப் படம் நடக்காமல் இருக்கிறது இது ஒரு பக்கம் இருக்க தற்போது தமிழில் ஒஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடினர்.
மேலும் இந்த படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து சதீஷ், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி தர்ஷாகுப்தா சன்னி லியோனுடன் இணைந்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.