தற்பொழுது உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் என்னவெல்லாம் செய்தால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய முடியும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு சோசியல் மீடியாவில் தனது அழகிய புகைப்படத்தை வெளியிடுவது யூடியூப் ஆரம்பிப்பது என்று பலவற்றை செய்து வருகிறார்கள்.
வாரிசு நடிகர் நடிகைகளை விடவும் இவர்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். சின்னத்திரையில் இருந்தும் பலர் வெள்ளித்திரையில் பிரபலமடைந்து உள்ளார்கள். அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக என்றாலும் காமெடி,ஆட்டம், பாட்டம் என்று ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் ஒவ்வொன்றும் அமைந்துள்ளது.
அந்தவகையில் முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசனின் மூலம் தான் பலர் பிரபலமடைந்துள்ளார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலருக்கும் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகை பாலா,புகழ், சிவாங்கி இவர்களை தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளவர் அஸ்வின்.
இவர் முக்கியமாக சிவாங்கியின் மூலம் தான் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அந்தவகையில் பெண் ரசிகர்கள் இவர் எங்கு சென்றாலும் அஸ்வினே அஸ்வினே என்று கூறி அவரை விடாமல் தொந்தரவு செய்து வருகிறார்கள். இவர் இந்நிகழ்ச்சிக்கு முன்பு துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஆதித்ய வர்மா திரை படத்தில் துரு விக்ரமிற்கு அண்ணனாக நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் எந்த திரைப்படங்களும் சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை.பிறகு யூடியூப் சேனலில் ஆல்பம் சாங் இருக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வந்தார்.
ஆனால் எதுவும் கைகொடுக்காத நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் தற்பொழுது ஹீரோவாக அறிமுகமானது மட்டுமல்லாமல் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.
இந்நிலையில் அஸ்வின் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வந்து கொண்டிருக்கும் லிப்ரா புரொடக்ஷன் அஸ்வினி வைத்து தொடர்ந்து மூன்று திரைப்படங்களை தயாரிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சி தான் அஸ்வின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.