சமீபகாலமாக வெள்ளித்திரைக்கு ஈடு இணையாக சின்னத்திரை பல்வேறு சூப்பரான நிகழ்ச்சிகளை கையாண்டு வருகிறது அந்த வகையில் மாஸ்டர் செஃப் போன்ற உணவு செய்யும் நிகழ்ச்சிகள் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி உள்ளன.
ஆனால் விஜய் டிவி வித்தியாசமாக சமையல் செய்பவர்களுடன் காமெடி பிரபலங்களை உதவிக்கு வைத்து செம கலாட்டாவான ஒரு நிகழ்ச்சியாக எடுத்து வருகிறது. அதற்கு குக் வித் கோமாளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றிகரமாக ஓடி அதை அடுத்து இரண்டாவது சீசனும் அண்மையில் வெற்றிகரமாக ஓடி முடிந்தது.
இதை தொடர்ந்து மூன்றாவது சீசன் மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். மூன்றாவது சீசன் வெகு விரைவிலேயே வெளிவர காத்திருக்கிறது. இரண்டு சீசன்களில் இதுவரை சமையல் கலை வல்லுநராக வலம் வந்த செஃப் தாமு அடுத்த முறையும் தலைவராக பொறுப்பை ஏற்பார் என தெரியவந்துள்ளது.
இவர் சின்னத்திரையில் இந்த நிகழ்ச்சியையும் தாண்டி யூடியூப் மற்றும் பல்வேறு பிரபல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயணிக்கிறார். அண்மையில் கூட செஃப் தாமுவின் மகளின் புகைப்படங்கள் வெளி வந்த நிலையில் தற்போது அவர் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது கமெண்டுகளையும் லைக்குகளையும் அள்ளி குவித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் இளம் வயதில் எப்படி இருக்கிறார் என்று.