சின்னத்திரையில் பல டிவி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன அதில் மக்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் விரும்பி பார்க்கப்படும் டிவி நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தான் . இந்த விஜய் டிவியில் மற்ற சேனல்களில் இருந்து சற்று வித்தியாசமாக பல புதுப்புது நிகழ்ச்சிகளை கொடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக காமெடிக்கு பெரிதளவு முக்கியத்துவம் கொடுத்து பல காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
அப்படி பல சீசன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் காமெடி நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இதில் சாதாரண இளைஞர்கள் பலர் இந்த நிகழ்ச்சி மூலம் தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி தற்போது சின்னத்திரையில் கொடிகட்டி பறக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் பாலா இவரது டைமிங் காமெடி மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தவர்.
பின்பு தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது காமெடி திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இந்த வருடத்திற்கான சிறந்த காமெடியன் விருதையும் பாலா வாங்கியுள்ளார்.
இதையடுத்து சென்ற வாரம் ஒளிபரப்பான நீயா நானா தொடரில் பாலா கெஸ்டாக பங்கேற்றார். அதில் அவர் பலருக்கும் தெரியாத அவரது காதல் கதை பற்றி கூறியுள்ளார். நான் ஒன் சைடாக இரண்டு மூன்று பெண்களை காதலித்தேன் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு பெண்ணை பார்த்தேன் இருவரும் நன்றாக பேசி பழகினோம் ஒரு கட்டத்தை எனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்தேன் அந்தப் பெண் அழுது கொண்டே உங்களை நான் அண்ணாவாக தான் நினைத்தேன்.
என கூறியுள்ளார். அந்தநேரம் இனி காதலே வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். இருந்தாலும் இந்த சோகத்தை பாலா ஜாலியாகவே சொல்லியிருந்தார். ஆனால் இதைக் கேட்ட பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலா பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் பரவிவருகிறது.