ஒரே ஒரு பதிவை போட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்த “குக் வித் கோமாளி” அஸ்வின் – தீயாய் பரவும் செய்தி.

ashwin
ashwin

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கப்பட்டு சிறப்பாக வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் நடத்தி முடித்துள்ளனர்.

இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட அஸ்வின் பவித்ரா லக்ஷ்மி, தர்ஷா குப்தா, தீபா போன்ற படரும் வெள்ளித்திரையில் பயணித்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் அஸ்வின் முதல் ரன்னர்அப் ஆக வெற்றி பெற்றார்.

குக் வித் கோமாளி மூன்றாவது சீசனும் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் பல பெண்களின் கனவு நாயகனாக மாறியுள்ளார்.  மேலும் இவரது பாடல்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ட்ரெண்டிங்கில் வலம் வந்தது.

தற்பொழுது அஸ்வின் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.  மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பணியாற்றிய புகழும் இதில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இதுபோல் பல பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்த வண்ணமே உள்ளன. இந்த நிலையில் நடிகர் அஸ்வின் அவரது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “எல்லோருக்குமான தேவை அன்பு தான் “என பதிவிட்டுள்ளார்.