தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை வனிதா விஜயகுமார் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் பிரபலமானவர்.
அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சிறந்த குணத்தை வெளி காட்டியதன் மூலமாக தற்போது வனிதாவிற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது மட்டுமில்லாமல் ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தற்சமயம் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் வனிதா தனக்கு பிடித்த சமையல் குறிப்புகளை வெளியிடுவது மட்டுமில்லாமல் தனக்கு விருப்பமான உணவுகளை மிக சிறப்பாக சமைத்து வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் சில நாட்களாக எந்த ஒரு வீடியோவும் இணையத்தில் வெளி விடவில்லை.
அந்தவகையில் ரசிகர்களின் வரவேற்ப்பை புரிந்துகொண்ட வனிதா சமீபத்தில் ஒரு சமையல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆனால் இவர் வெகு நாள் ஆறப்போட்டு வெளியிட்ட வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டது.
ஏனெனில் அந்த வீடியோவில் நடிகை வனிதா சிக்கன் பிரியாணியும் மட்டன் பிரியாணியும் செய்யவில்லை பீப் பிரியாணி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் இதனை பலர் பாராட்டினாலும் ஒரு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஏனெனில் இந்துக்கள் அனைவரும் மாடுகளை கடவுளாக நினைத்து வழிபட்டு வருகிறார்கள் அந்தவகையில் வனிதா அதனை அவமதித்தது போல் நடந்து கொண்டது மட்டுமில்லாமல் இந்த வீடியோ மூலமாக ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
அந்த வகையில் இந்த சர்ச்சைக்கும் நடிகை வனிதா கூலாக பதில் அளித்துள்ளார் அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால் தன்னுடைய வலைத்தளத்தில் வேறு மதத்தைச் சார்ந்த நண்பர்களும் எனக்கு இருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் நான் ஏழு வயதில் இருந்தே அமெரிக்காவில் வளர்ந்தவள் ஆகையால் சிறுவயதிலிருந்தே நான் பல நாட்டு உணவுகளை சாப்பிட்டு உள்ளேன்.
மேலும் தயவு செய்து உங்களுக்கு இந்த வீடியோ பிடிக்கவில்லை என்றால் நான் செய்த முறைப்படி வேறு ஒரு மாமிசத்தையோ அல்லது காய்கறிகளையோ வைத்து இந்த பிரியாணியை செய்து சந்தோஷமாக சாப்பிடுங்கள் என வனிதா குறிப்பிட்டுள்ளார்.