சினிமாவிற்கு சாதி மதம் தெரியாது..! நடிகர் கமல் பேச்சுக்கு பதிலடி கொடுத்த சர்ச்சை இயக்குனர்..!

kamal-1
kamal-1

சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது திரைத்துறையில் ஜாதி மதத்திற்கு இடம் கிடையாது என்று கூறியது மட்டுமில்லாமல் சினிமாவிற்கு ஜாதி மதம் பார்க்க தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு கமலஹாசன் பேசியதை பார்த்த சார்பாட்டா பரம்பரை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பா ரஞ்சித் அவர்கள் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் இவர் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி, காளா, கபாலி சார்பட்டா பரம்பரை மெட்ராஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் முகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.

அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தமிழ்சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே ஜாதி வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் வருகிறது அதை நான் உறுதியாக நம்புகிறேன் என பா ரஞ்சித் கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் இதை நானே பல முறை உணர்ந்துள்ளேன் என கோரியுள்ளார்.

இவ்வாறு திடீரென பா ரஞ்சித் அதனை நான் உணர்ந்தேன் என்று கூறியது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த விட்டது ஏனெனில் ஒரு இயக்குனர் இவ்வாறு பேசுவது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக அமைந்து விட்டது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

pa ranjith-1
pa ranjith-1

பொதுவாக பா ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் கூட வேறுபாடுகள் உள்ளபடி தான் இயக்கப்படுகிறது எனவும் அவர் வேறுபாடுகளை குறிப்பிட்டு காட்டி திரைப்படம் இயக்குவதாகவும் நெட்டிசன்கள் பதில் கொடுத்து வருகிறார்கள்.