பேட்ட படத்தின் தொடர்ச்சி ஜெகமே தந்திரம் இணையதளத்தில் பரவிய செய்திக்கு.? பதில் தெரிவித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.!

dhanush
dhanush

நடிகர் தனுஷ் கர்ணன் திரைபடத்தை தொடர்ந்து ரசிகர்கள்  மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வந்த படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

இப்படம் வருகின்ற 18ம் தேதி நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இப்படி இருக்க ஜகமே தந்திரம் புகைப்படங்கள் மற்றும் டிரைலரை பார்த்த மக்கள்  மற்றும் ரசிகர்கள் இன்னொரு படத்துடன் தொடர்பு இருப்பது போலவே தெரிகிறது என சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் கூறிவந்தனர்.

அது வேற எந்த படத்துடன் இல்லை கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து எடுக்கப்பட்ட திரைப்படம் பேட்ட.  இந்த திரைப்படத்துடன் தான் ஒத்து போவதாக கூறுகின்றனர். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஒரு மகன் இருப்பார் அவர் தான் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் வரும் தனுஷ் என்று கூறிய ஒரு புரளி கிளப்பினர்.

இச்செய்தி இணைய தளத்தில் வேகம் எடுத்தது அதற்கு பதிலளித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜெகமே தந்திரம் படத்திற்கும் பேட்ட படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என கூறி அதற்கு முட்டுக்கட்டை போட்டார்.

karthik suburaj
karthik suburaj

படம் வெளிவருவதற்கு இன்னும் பத்து நாட்களுக்கு மேலாக இருப்பதால் அதற்குள் ரசிகர்கள் வேறுஒரு படத்துடன் ஜகமே தந்திரம் படத்தையும் சேர்த்து ஒரு இன்னொரு புரளியை கிளப்பி விடுவார்கள் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறது படக்குழு.