பிக்பாஸில் வைல்டு கார்டு என்ட்ரிக் கொடுக்கும் போட்டியாளரின் கணவர்.! வெடிக்க போகும் பிரச்சனை..

bigg boss 6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி, நித்யா இருவரும் கணவர் மனைவியாக கலந்து கொண்டார்கள் இவர்களுக்கு பிறகு வேறு எந்த ஜோடியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இல்லை பிரிந்து வாழ்ந்து வந்த பாலாஜி, நித்யா இருவரையும் கமலஹாசன் அவர்கள் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்ததை பார்த்தோம்.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு விவாகரத்து ஜோடி இந்நிகழ்ச்சிக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வரும் நிலையில் இவருடைய கணவர் தினேஷ் தான் விரைவில் வைல்ட் காடு என்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு அறிமுகமாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் இந்நிகழ்ச்சி வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தினேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் திருமணமாகி பல வருடங்களாக இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக கூறினார்கள்.

மேலும் இவர்களுடைய பிரிவு தற்காலிகமானது தான் விரைவில் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தாடி பாலாஜி மற்றும் நித்தியாவை கமல் அவர்கள் சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து வைத்தது போல ரட்சிதா தினேஷ் இவர்களுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாட்டினையும் கமலஹாசன் அவர்கள் தீர்த்து ஒற்றுமையாக வாழ வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

rachitha mahalakshmi
rachitha mahalakshmi

இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் ரட்சிதாவை ஒருதலையாக ராபர்ட் மாஸ்டர் காதலித்து வரும் நிலையில் தினேஷின் வருகையினால் கண்டிப்பாக பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஏற்கனவே தினேஷ், ராபர்ட் மாஸ்டரை பற்றி மிகவும் கடுமையாகப் பேசி வரும் நிலையில் வைல்ட்க் கார்டு என்ரிக் கொடுத்தால் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.