விஜய் டிவியில் பாப்புலரான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான் இதுவரை 6 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 7 -வது சீசன் நாளை அக்டோபர் 1 -ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. மற்ற பிக்பாஸ் சீசன் போல் இந்த சீசன் இருக்கப்போவதில்லை பல மாற்றங்களை செய்துள்ளது.
குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் மொத்தம் இரண்டு வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது இதனால் பிக்பாஸ் சீசன் 7 -யை ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் பெரிதளவில் காத்துக் கொண்டிருக்கின்றனர் இருந்தாலும் இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ள இப்பொழுது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. விலாவாரியாக பார்ப்போம்.. விஜய் டிவியிலிருந்து குறைந்தது இரண்டு, மூன்று தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் களமிறங்குவது வழக்கம்.. அந்த வகையில் விஜய் டிவிலிருந்து மாகாபா ஆனந்த், சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா, தொகுப்பாளர் ரக்சன், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் போன்றவர்கள் இறங்கப் போவதாக கூறப்படுகிறது.
Confirmed contestant list of : #BiggBossTamil7
1. #DharshaGupta
2. #BablooPrithiveeraj
3. #KumaranThangarajan
4. #RaveenaDaha #BiggBossTamil #BiggbossContestants #Biggboss7Tamil #KamalHassan pic.twitter.com/88l2fHzSgs— Single Singam🦁💙 (@Nikhil195Nikhil) September 22, 2023
மேலும் பாலிவுட் நடிகை மீரா சோப்ரா, காக்கா முட்டை விக்னேஷ் போன்றவர்கள் களமிறங்க இருக்கிறார்கள். இவர்களை தவிர கவர்ச்சி நடிகையான தர்ஷா குப்தா இறங்குகிறார் அவருடன் இணைந்து அம்மு அபிராமி, கல்லூரி படம் நடிகர் அகில், தொகுபாளினி ஜாக்கலின், அப்பாஸ், விஜே பார்வதி, நடிகை ரேகா நாயர், சோனியா அகர்வால், உமா ரியாஸ்கான், சீரியல் நடிகர் பப்லு ஆகியவர்கள் களமிறங்குகின்றனர்.
செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், பெண் பஸ் ஓட்டுனர் ஷர்மிளா, சீரியல் நடிகர் தினேஷ் கோபாலசாமி, கலக்கப்போவது யாரு சரத், பாண்டியன் ஸ்டோர் குமரன் தங்கராஜன், நடிகை இந்திராஜா, நடிகை வனிதா மகள் ஜோவிகா விஜயகுமார் உள்பட 25 பேர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.