அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு!! குழந்தைகளுக்கு வாட்ஸ் அப்பில் பொம்மலாட்டம் மூலம் கொரோனா விழிப்புணர்வூ!!

pomma
pomma

Congratulations to the headmaster of the government school !! Corona Awareness Through Puppetry on WhatsApp for Kids!:கொரோனா பரவலை தடுக்க பல சமூக ஆர்வலர்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் கோவையை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான சீனிவாசன் என்பவர் பொம்மலாட்டக் கலைஞர் ஆவார்.

இவர் பொம்மலாட்ட நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப்பின் மூலம் நாள்தோறும் கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வீடியோவில் குழந்தைகளை மிகவும் கவனமாக இருங்கள், வெளியில் செல்லும்பொழுது மறக்காமல் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுங்கள், காய்ச்சல், இருமல் இருந்தால் பெற்றோர்களிடம் சொல்லிடுங்க, வெளியில் சென்று விட்டு வந்தவுடன் குளித்திடுங்கள், மிகவும் கவனமாக இருந்தால் தான் கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என்று கூறி பொம்மலாட்ட நிகழ்ச்சி வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் பள்ளி, பள்ளியாக சென்று மதுவிலக்கு, கொசு ஒழிப்பு, தொழிலாளர் ஒழிப்பு, வாக்களிப்பின் கடமை ஆகியவற்றின் பற்றிய விழிப்புணர்வுகளையும் பொம்மலாட்ட நிகழ்ச்சியின் மூலம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.