தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதை ஓரியண்டட் கைகள் எடுக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாத்துறை உலகம் இரண்டாம் பாகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி இப்படம் வெளிவந்து மக்கள் மற்றும் விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது.
இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் போட்டி போட்டு வந்தனர் இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் படத்தை இயக்கிய இயக்குனர் வாசு அவர்கள் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் வேட்டைமன்னன் என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் யார் அந்த ரோலுக்கு செட்டாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகவா லாரேன்ஸ் சிறப்பாக இருப்பார் என கூறி அவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதனை அடுத்து சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி சந்திரமுகி கதைக்கு புத்துணர்வு ஊட்டினார் இதனையடுத்து இப்படத்திலும் அவரை நடிக்க வைக்கலாம் என பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் எழுந்தது அது மட்டுமில்லாமல் இப்படத்திற்காக அவர் பல கோடி கேட்டு உள்ளார் எனவும் சில வதந்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இது குறித்து பேசிய ஜோதிகா அவர்கள் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக இதுவரை என்னை யாரும் அணுகியது இல்லை.
என்னை தவிர இந்த படத்தில் வேறு யார் நடித்தாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறி உள்ளார் இவ்வாறு கூறிய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார் ஜோதிகா. இந்தநிலையில் ஜோதிகா ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகா நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி வருகின்றனர்.