உலகநாயகன் கமலஹாசன் திரை உலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக இருந்தாலும் ஆனால் இதுவரை விக்ரம் படம் அளவிற்கு எந்த ஒரு படமும் பிரம்மாண்டமான வசூலை அள்ளவில்லை. இந்த படம் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியை ருசிக்க முக்கிய காரணம்..
கமலின் நடிப்பு மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கம் மற்றும் அனிருத் இன் இசை போன்றவை பக்கபலமாக இருந்தன. அதே சமயம் விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா, நரேன், மைனா நந்தினி மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தனர் அதுவும் விக்ரம் படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
படம் தொடர்ந்து அதிக நாட்கள் ஓடியது இந்த படம் இப்பொழுதும் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 100 நாட்களைக் கடந்ததை முன்னிட்டு கோவையில் வெற்றி விழா நடத்தப்பட்டது அதில் உலக நாயகன், திரை உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய கமலஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் நான்கு படங்கள் நடிக்கும் போதும் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை
அதை மாற்ற வேண்டும் என உழைத்தேன் சினிமாவில் சாதித்து எனக்காக மட்டும் என் பெருமையை பீத்திக் கொள்ள முடியாது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய நடிகர் கமல் ஓடிடி காலகட்டத்தில் பழைய திரையரங்குக்குள் எல்லாம் மல்டிபிளக்ஸ் தேவையற்றவர்களாக மாறி வருகின்றன அதற்கு இளைஞர்கள் ஆதரவு கொடுக்க முன் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது ஓடிடி தளங்கள் குறித்து முன்கூட்டியே நான் சொல்லியிருந்தேன்.
அதுவும் இப்பொழுது வந்துவிட்டது திரையரங்குகளில் உணவகங்கள் வரப்போகிறது அமெரிக்காவில் ஏற்கனவே வந்துவிட்டது உணவகமும் ஒரு நல்ல தொழில் தான் சினிமா லவ் என்னும் குறையவில்லை வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு போன்று தான் சினிமாவும் என தெரிவித்தார் சினிமா தான் 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்துள்ளது. நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படம் எடுக்க உத்வேகமாக அமையும் நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள்.
நீங்கள் வாழ்த்தினால் அவர்களின் சம்பளம் இரண்டு மடங்காகும். என்னை மட்டும் அல்ல நன்றாக நடிக்கும் நடிகர்களை வாழ்த்துங்கள். எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும் பாலிவுட் பயப்படுகிறார்கள் தெனிந்திய சினிமா பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பி விட்டது. என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கிறது புதிதாக வரக்கூடிய நடிகர்களை கவனித்து வருகிறேன் என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறேன் என பேசினார்.