நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் இதுவரை பெரும்பாலும் ஆக்சன், காதல், சென்டிமெண்ட் படங்களில் பெரிதும் நடித்திருந்தாலும் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான திரைக்கதையை தற்போது தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “மாநாடு” இந்த திரைப்படம் வருகின்ற 25ஆம் தேதி உலக அளவில் பெரிதாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், எஸ் ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், பிரேம்ஜி போன்ற பலர் நடித்துள்ளனர்.
படம் வெளிவருவதற்கு முன்பாக படத்தை புரமோஷன் செய்ய தற்போது நடிகர் சிம்பு தீயாய் பறந்து கொண்டிருக்கிறார் தமிழில் ஆடியோ லான்ச் பேசியதை தொடர்ந்து தெலுங்கில் தற்போது பேசி வருகிறார் போதாத குறைக்கு twitter பக்கத்திலும் பேசி அசத்துகிறார் இதனால் அவரது படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
மேலும் சிம்பு கேரியரில் இது வித்தியாசமான படம் என்பதால் ரசிகர்களும் எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்த படம் குறிப்பாக டைம்லர் லூப் படமாக உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 900 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது தற்போது டிக்கெட் புக்கிங் நடந்துகொண்டு வருகிறது.
டிக்கெட் புக்கிங் ஓரளவு நல்ல வரவேற்ப்பை பெற்று அனைத்து திரையரங்கிலும் காலைக்காட்சி ஹவுஸ்புல் ஆகிவிட்டதாம் மாநாடு கண்டிப்பாக முதல் நாள் மட்டுமே சுமார் பத்து கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்பது கணிப்பாக இருக்கிறது படம் சிறப்பாக இருந்தால் அதையும் தாண்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வெங்கட் பிரபு மேடையில் பேசியது மாநாடு திரைப்படம் நீங்கள் ரசிக்கும்படி இருக்கும் என அடித்து கூறி உள்ளதால் தற்போது போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் படத்தை புக் செய்து வருகின்றனர்.