வசூல் வேட்டையில் “மாநாடு” – முதல் வாரத்தில் மட்டுமே அள்ளிய தொகை எவ்வளவு .? ஆச்சரியத்தில் மற்ற பிரபலங்கள்.

maanaadu
maanaadu

நடிகர் சிம்பு சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க நடிக்க வில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது மேலும் அவர் நடித்த ஒரு சில படங்கள் வெற்றி பெறாததால் ரசிகர்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர் அதை உடைக்கும் வகையில் வெங்கட் பிரபுவுடன் கைகொடுத்து நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.

இந்த திரைப்படம் சிம்புவை மீட்டெடுத்து உள்ளது என பலரும் அவரது ரசிகர்கள் கூறிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் இதுவரை காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த சிம்புவை முதல் முறையாக வித்தியாசமான படமாக மாநாடு திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார்.

படம் முழுக்க முழுக்க டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதில் சிம்பு படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார் தேவையில்லாமல் பஞ்ச் டயலாக், சீன் போடுவது என அனைத்தையும் தவிர்த்து இந்த திரைப்படத்தின் கதையை எப்படி நடிக்க வேண்டுமோ அதையே சரியாக புரிந்து நடித்துள்ளது படத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிம்பு இணைந்து நடித்த நடிகை, நடிகர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்தியுள்ளனர். மேலும் இந்த தடவை படம் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது பெரும் மக்கள் கூட்டத்தையே அலையாக திரை அரங்கு பக்கம் இழுத்து வந்து உள்ளது மாநாடு படம். அந்த அளவிற்கு படம் பிரமாதமாக இருப்பதால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மேலும் வசூலிலும் அடித்து நொறுக்கி வருகிறது இதுவரை மாநாடு திரைப்படம் முதல் வாரத்தில் மட்டுமே சுமார் 40 கோடி அறிவு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை 3.75 கோடி வசூல் செய்துள்ளதாம்.