திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களை தூண்டிவிட்ட மாநாடு பட தயாரிப்பாளர்..!

manadu-1
manadu-1

சமீபத்தில் நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது வெகுகாலமாக படப்பிடிப்பில் இருந்து பல்வேறு சிக்கல்களை கடந்து தற்போது திரையில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இதர கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர் என பல்வேறு பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் தரமாக இருக்கவேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவை தேர்வு செய்துள்ளார்கள்.

இப்படி புகழ்வாய்ந்த பிரபலங்களை வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தை தயாரித்து வருபவர் தான் சுரேஷ் காமாட்சி இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

அந்தவகையில் இந்த திரைப்படமானது வருகின்ற 25 ஆம் தேதி வெளியாக போவதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வந்தார்கள்.  ஆனால் தற்போது இந்த திரைப்படமானது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வருகின்ற 18ஆம் தேதி பிரிரிலீஸ் செய்யப் போவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

manadu-2
manadu-2

இவ்வாறு வெளி வந்த தகவலின் படி ரசிகர்கள் பட்டாசு கும்பாபிஷேகத்திற்கு முன் கூட்டியே அட்வான்ஸ் கொடுத்து காத்திருப்பது மட்டுமல்லாமல் சரவெடி வெடிக்கவும் வேட்டு வைக்கவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.