தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் ஹெச். வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய இரண்டு படங்களும் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது.
இதனை தொடர்ந்து அஜித் குமார் அடுத்ததாக விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் ஏகே62 திரைப்படத்தில் அஜித்த்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளார் என்று கூறபடுகிறது. இதுவரைக்கும் அஜித் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்ததே இல்லை இதுதான் முதன் முறை என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து பின்பு ஹீரோவாக மாறிய நடிகர் சந்தானம் அவர்கள் இனிமேல் காமெடியனாக நடிக்க போவதில்லை என்று எதிர்பார்த்த நிலையில் அஜித்திற்காக தற்போது ஏகே 62 இல் காமெடி ரோலில் நடிக்க தயாராகி விட்டார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் சந்தானம் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க 60 நாள் கால் சீட் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் அவர்கள் தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க முன்பை விட இந்த முறை இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டு இருக்கிறார். இதற்கு லைக்கா நிறுவனமும் ஒப்புகொந்ததாக கூறபடுகிறது. மேலும் ஏகே 62 திரைப்படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது இந்த நிலையில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி கொண்டார் நடிகர் சந்தானம்.