இயக்குனர் ஹச். வினோத் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான திரைப்படங்கள் தான். அந்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்று இருக்கின்றன முதலில் இவர் சதுரங்க வேட்டை.
என்னும் படத்தை எடுத்து சினிமா உலகில் கால் தடம் பதித்தார் முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை எடுத்தார் இதில் ஹச் வினோத் கடைசியாக எடுத்த இரண்டு திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியது..
இப்பொழுது அஜித்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து துணிவு படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார் இந்த படம் அவருக்கு வெற்றி பெற்றால் அவரது சினிமா கேரியர் மீண்டும் அசுர வளர்ச்சி எட்டும், தோல்வியை கண்டால் அதல பாதாளத்திற்கு செல்ல வேண்டிய ஒரு சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது.
துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது அதுவும் தளபதி விஜயின் வாரிசு படத்தை எதிர்த்து மோதுகிறது. இதில் வாரிசு படத்தை பீட் பண்ணி துணிவு படம் வெற்றி பெற்றால் மட்டுமே அஜித்துக்கும் சரி வினோத்திற்கும் சரி இன்னும் வளர முடியும் தோல்வியை கண்டால் இருவருமே அவ்வளவு தான்.. குறிப்பாக ஹச். வினோத் நிலைமை ஆதோ கதி தான்.
இந்த நிலையில் இயக்குனர் ஹச். வினோத் பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஏற்கனவே ஹச். வினோத் கமலுக்கு ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கி இருந்தாராம். ஆனால் தற்பொழுது கமல் அவருக்கு கண்டிஷன் போட்டு உள்ளாராம் அதாவது நீங்கள் இப்பொழுது எடுத்துள்ள துணிவு திரைப்படம் மாபெரும் ஹிட் அடிக்கும் பட்சத்தில் என்னுடன் இணையலாம் அப்படி இல்லை என்றால் அவ்வளவுதான் என கண்டிஷன் போட்டு இருக்கிறாராம்? இதனால் ஹச். வினோத் தற்பொழுது துணிவு திரைப்படத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறப்படுகிறது.