இயக்குனர் செல்வராகவனை கவர்ந்திழுத்த இசையமைப்பாளர்கள் – யார் யார் தெரியுமா.? லிஸ்டில் இல்லாமல் போன இளையராஜா, யுவன்.

selvaragavan-
selvaragavan-

இயக்குனர் அவதாரம் எடுத்த செல்வராகவன் ஆரம்பத்தில் தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற சூப்பரான படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கிய ஓடிக்கொண்டிருந்தவர.

திருமண வாழ்க்கையில்  சில பிரச்சனைகளை சந்தித்தால் சினிமாவில் சிறிது காலம் தென்படாமல் போனார் ஒரு வழியாக மீண்டும் தமிழகத்தில் தற்போது இயக்குனராகவும், நடிகராகவும் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தி வருகிறார். ஒரு நடிகனாக கீர்த்தி சுரேஷின் உடன் கை கோர்த்தது சாணி காயிதம் படத்திலும், விஜயின் பீஸ்ட் படத்திலும் நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தனது தம்பி தனுஷுடன் கைகோர்த்து “நானே வருவேன்” திரைப்படத்தை இயக்கியும், நடித்தும் வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகம், புதுக்கோட்டை 2 என அடுத்தடுத்த படங்களை இயக்கிய ரெடியாக இருக்கிறார் என்ற தகவல்களும் வெளி வருகின்றன.

இதனால் செல்வராகவன் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் தள்ளி போகும் என மட்டும் கூறப்படுகிறது. சினிமா உலகில் படங்களை இயக்குவது, நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தாலும் அண்மைகாலமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான பதிவுகளையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் எனக்கு அண்மைகாலமாக சித் ஸ்ரீராம், தீ மற்றும் ஸ்வேதா மோகன் பாடும் பாடல்கள் தான் தனக்கு ரொம்ப பிடித்து இருப்பதாகவும் தனது பிலேலிஸ்ட்டை அவர்களது பாடல்கள்தான் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அப்போது இளையராஜா, யுவன் சங்கர் ராஜா போன்றவர்கள் பாடல்கள் இல்லையா என கேட்கத் தொடங்கி உள்ளனர்.