விஜய் பட தலைப்பை மாற்றி அமைத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – மிரண்டு போன படக்குழு.!

gv-prakash-
gv-prakash-

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66 வது திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு கூறியுள்ளது.

தளபதி விஜய் பல்வேறு சிறந்த இயக்குனருடன் கைகோர்த்து  பணியாற்றி உள்ளார் அவருக்கு ரொம்ப பிடித்துப் போனால் மட்டுமே ஒரே இயக்குனருடன் பயணிப்பது வழக்கம் அந்த வகையில் முருகதாஸ், அட்லீ போன்றவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி உள்ளார் இவர்கள் இருவருடன் சேர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று உள்ளன.

குறிப்பாக இயக்குனர் அட்லி உடன் அவர் நடித்த படங்கள் அனைத்தும் மெகாஹிட் தான். துப்பாக்கி, கத்தி ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தளபதி விஜய், அட்லீ உடன் கை கோர்த்து நடித்த திரைப்படம் தான் தெறி இந்த படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தெறி படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் எஸ். கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

படத்தின் சூட்டிங் ஒரு பக்கம் விருவிருப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில் படக்குழு எந்த மாதிரியான தலைப்பு இந்த படத்திற்கு வைப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் முழி பிதுங்கி வந்தனர் அட்லி இந்த படத்திற்கு முதலில் தாறுமாறு என டைட்டில் வைத்திருந்தார். இவை எப்படியோ கசிந்துவிட்டது ரசிகர்களும் அதனை சொல்லிக் கொண்டு வந்தனர் இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தாறுமாறு படத்தின் பாடலை ரெடி செய்து வருகிறேன் எனக்கூறினார்.

இதனால் அப்போது பெரிய அளவில் வைரலானது படத்தின் பெயர் முன்கூட்டியே தெரிந்ததால் படக்குழு அதிர்ச்சியானது இந்த பெயரை வைத்தால் நன்றாக இருக்காது என படக்குழு வேறு ஒரு பெயரை யோசித்துக் கொண்டிருந்தது. பின் ஒருவழியாக படக்குழு “தெறி” என பெயரை மாற்றி படத்தை ரிலீஸ் செய்தது. இந்த பெயரும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.